மாத்தளை மாவட்டத்தில் அரசிடம் நிதியை எதிர்பார்க்காமல் சொந்த நிதியை பயன்படுத்தி பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட பாதையை கலேவல பிரதேச மக்கள் சீரமைத்துள்ளனர்.
இதன்போது எலமல் பொத ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் இணைந்து ஊர் மக்களின் பண உதவியுடனும், சிறார்கள், வாலிபர்கள் மற்றும் வயோதிபர்களின் முயற்சியுடனும் 2 கி.மீ தூரம் வரையிலான பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.


