தங்கம் மற்றும் கைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயங்களை ஆராய்ந்த சபாநாயகர் அவரின் சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பெற்று சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் கருத்தை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
