இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கத்தை கடத்த முயற்சித்த இருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கட்டுநாயக்க சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளை சேர்ந்த 44 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 780 கிராம் எடையுடைய 80 இலட்சம் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.