தங்கத்துடன் கைதான அலி சப்ரி ரஹீம் விடுதலை

 

மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான எப்.இசட் 547  இலக்கம் விமானம் மூலம் மத்திய கிழக்கு நாடான துபாயிலிருந்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார்.

இதன்போது, அவர் கட்டுநாயக்க வானூர்தி தள பிரபுக்கள் முனையத்தில் வைத்து விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைதானவரிடம் இருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான மூன்றரை கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் சுங்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தங்கத்துடன் கைதான அலி சப்ரி ரஹீம் விடுதலை

தங்கத்துடன் கைதான அலி சப்ரி ரஹீம் விடுதலை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்