இரத்தினபுரி, பனமுர பிரதேசத்தில் பிரதான வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியைப் பறித்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் இரத்தினபுரி கல்தொட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பதுடன் குரகல சோதனைச் சாவடியில் கடமையாற்றியவர்.
பொலிஸ் கான்ஸ்டபிளே 200,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பனாமுர பிரதேசத்தில் 200,000 ரூபா பெறுமதியான நகையும் மற்றும் கட்டுவத்த பிரதேசத்தில் 138,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியும் கொள்ளையிடப்பட்டுள்ளது