கொழும்பில் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.
மானெல் உயன, மபுதுகல பகுதியைச் சேர்ந்த ஹாசினி (வயது – 23) என்ற கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி காய்ச்சல் காரணமாக கடந்த 6 ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின், தீவிர சிகிச்சைப் பிரிவில், பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யுவதி உயிரிழந்துள்ளார்.