டெங்கு நோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான பொதுமக்களின் அழைப்புகளுக்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
சனி – ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 011-7 966 366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் டெங்கு நோய்த் தொற்று மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.