டுபாயில் தொழிவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்த நபரொருவர் கண்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உலவாளியொருவரினூடாக கண்டி நகரிற்கு குறித்த வியாபாரியை வரவழைத்து அவரை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அவர் குருநாகல் பிரதேசத்திலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினூடாக இந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து விளம்பரம் வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.