உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் கடவுச்சீட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் கடவுச்சீட்டு என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் கடவுச்சீட்டு தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டுத் திட்டம் சோதனை அடிப்படையில் பெப்ரவரி 2024 வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின், இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.