மோதல் சம்பவம் காரணமாக, நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தடை விதிக்குமாறு நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு பரிந்துரைத்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் மோதல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில், ஆராய்ந்த சிறப்புரிமைகள் குழு, குறித்த மூன்று பேருக்கும் ஒரு மாத காலம் நாடாளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடையினை விதிக்குமாறு பரிந்துரைத்துள்ளது