அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பொலிஸ் பிரிவில் டயகம NLD தேசிய கால்நடைப் பண்ணையின் டேவிட் பாம் பகுதியில், 16 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை கைது.
இவ்வாறான குற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய தந்தை ஒருவர் இன்று சனிக்கிழமை காலை சுமார் 11.00 மணியளவில் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.