-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ.சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜீலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் 1 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை இடைநிறுத்தல் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியிலாளர்கள், சமூக ஆர்வலர்களின் பங்கு பற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்