கலகொடாத்தா ஞானசார தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த ஞானசார தேரர்,
வடக்கு மற்றும் கிழக்கு, விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு, பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்கு தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுப்பதாகவும், இவரை போல பலரை சந்தித்துள்ளதாகவும், எவ்வித காரணத்திற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும், கூறியிருந்தார்.
ஞானசார தேரருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இரா.சாணக்கியன், அவருக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தனது அறிக்கையில்,
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும், பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதோடு, இச் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம், என தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான இன துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது எனவும், தனது கண்டன அறிக்கையினை இரா சாணக்கியன் வெளியிட்டுள்ளார்.