கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தின் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை இலங்கை தமிழரசு கட்சி – வாலிப அணி இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் நிகழ்வு ஆரப்பமாவதற்கு முன்னதாக புனித மரியாள் அன்னை ஆலயத்திற்கு அருகில் சிறிது நேரம் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இணைந்து கோசங்களை எழுப்பி பின்னர் நடைபவணியாக சாள்ஷ் மண்டபத்திற்கு வந்தனர்.
அதைனை தொடர்ந்து ஜோசப் பரராசசிங்க சிங்கம் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் விளக்கு ஏற்றியும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மதகுருமார்களின் ஆசி உரை இடம்பெற்றது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கருத்து தெரிவிக்கும் போது கடந்த 3 வருடங்களாக தாம் தொடர்ச்சியாக இந்த நிகழ்வில் பங்கேற்பதாகவும் முதல் வருடம் இந்த செயலை செய்ததாக கருதப்படும் நபர் சிறையில் இருந்ததாகவும் அடுத்த வருடம் விடுவிக்கபட்டதாகவும் அதற்கு அடுத்த வருடம் தாம் இந்த அஞ்சலியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் உயர் பதவியில் இருந்ததாகவும் எனினும் இம்முறை அவ்வாறு இல்லாமல் சனல் 4 வெளியிட்ட சில ஆவணப்படுத்தல்கள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நினைவு பேருரையினை தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்ற தலைப்பில் திருமதி. புளோரிடா சிமியோன் வழங்கியதுடன் அவர் மலையக மக்களுக்கான அங்கிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருமதி. புளோரிடா சிமியோன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.







