42 வீதமான மக்கள் வாக்களித்து அதிகாரத்தில் இருக்கின்ற ஜே.வி.பிக்கு எதிராக இந்த நாட்டில் 58 வீதமான மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று ஆட்சியை பிடித்திருக்கும் ஜே.வி.பி கடந்த காலங்களில்தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள். இது தெரியாதவர்கள் தங்களது தாய்தந்தையர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
இதன் போது நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில் (காணொளி இணைப்பு)
இந் நிகழ்வில் தேர்தலில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களான கோவிந்தன்கருணாகரம்(ஜனா), தம்பிப்பொடி வசந்த ராசா, நாத லிங்கம் சங்கரப்பிள்ளை,மாணிக்கம் உதயகுமார், இராசையா துரைரெத்தினம், பிரிசிங்கம் வினாயகமூர்த்தி, சுப்பிரமணியம் தேவராசன், செல்வரெத்தினம் மனோராதா என்போர் கலந்து கொண்டு உரையாற்றினர்.