கடந்த மாதத்துக்குள் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 620,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், கடந்த வருடம் முழுவதும் 720,000 குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.