அமைச்சர் ஜீவன் தொண்டமான் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையகத்தின் சில பெருந்தோட்டப்பகுதிகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரு, மார்காஸ், இஸ்கிராப், நேஸ்பி, மூன் ப்ளேன், லவர்ஸ்லீப் ஆகிய பெருந்தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட பீட்ரு தேயிலை தொழிற்சாலைக்குள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்