ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதுடன், 103 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜப்பானின் சசு மாவட்டத்தில் 05 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயதுடைய பெண் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.