ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷுவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6.0 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 01 ஆம் திகதி ஜப்பானில், ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த நிலநடுக்கத்தில் சிக்கிண்ட 100 பேர் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.