சீரற்ற காலநிலை காரணமாக கியூஷு தீவுகளிலும், ஜப்பானின் ககோஷிமா மற்றும் மியாசாகி பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதிகளிலிருந்து 360,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.