ஜனாதிபதியால், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து எடை போட்டு வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68 ஆவது கட்டமாக, அனுராதபுரம் ஸ்ரீ துடுகெமுணு மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்பாடசாலையில் நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம் மற்றும் அரங்கேற்றங்களுக்குத் தேவையான ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ,
சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது.ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர், என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.