-யாழ் நிருபர்-
ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இக் கவனயீர்ப்பு இடம்பெற்றது. ஆரம்பத்தில் ஏ-9 வீதியில் புகையிரத கடவைக்கு அருகில் பட்டதாரிகள் ஒன்று கூடியபோது பொலிஸார் அவ்விடத்தில் அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக பழைய பூங்காவற்கு அருகில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் அங்கு கவனயீர்பில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியினை நேரடியாக சந்திப்பதற்கு இவர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை.எனினும் ஒருங்பிணைப்புகுழு கூட்டம் நிறைவடைந்த்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்