இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலுடனும் நம்பிக்கையுடனும் 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, நம் அனைவருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஆயிரம் இருந்தாலும், அனைத்திலும் வெற்றியடைவதற்கு, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து தாய்நாட்டை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று கூறினார்.
கடந்த வருடத்தில் உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கஷ்டங்கள் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான அடிப்படை அடித்தளம் வெற்றிகரமாக எட்டப்பட்டதன் காரணமாக உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.