இரசாயன உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சோளம் பயிரிடும் விவசாயிகளின் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்
ஒன்லைனில் மட்டுமே பதிவு செய்யப்படுவதால், http://www.agrarian.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விவசாயிகள் தமது தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.
சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன உரங்கள் தேவைப்படுமாயின் பதிவு செய்வது கட்டாயமாகும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
15.08.2022 முதல் 31.08.2022 வரையிலான காலத்தில் குறித்த பதிவுகளை மேற்கொள்ளலாம்
ஒன்லைன் முறையில் பதிவு செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விவசாயிகள் தமது பகுதியில் உள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் அல்லது விவசாய சேவை மைய அதிகாரி ஒருவரின் உதவியைப் பெறலாம் என்று விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.