தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சோளப்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சோள பயிர்ச்செய்கையின் போது சோளம் கறுப்பு நிறமாதல் மற்றும் அதன் செடிகளின் வேர்கள் அழுகுதல் போன்ற நோய்கள் வேகமாக பரவி வருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், சோள பயிர்ச்செய்கையின் போது 20 முதல் 25 சோளச் செடிகளுக்கு இந்த நோய் நிலைமை காணப்பட்டால் விவசாய ஆலோசகர் ஒருவரை நாடுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.