இந்தியாவில் ஐதராபாத், தெலங்கானா மாநிலம், மகபூபநகர் மாவட்டத்தில் உள்ளஜட்சேர்லா நகராட்சிக்கு உட்பட்ட பூரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு அருகே சிறுவன் ஒருவன் சேவலை தன் கையில் கொண்டு செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவன் சேவல் திருடியதாகப் பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரினால் சிறுவனும் சேவலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், 18 வயது நிரம்பாத சிறார் என்பதால் அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். சேவல் யாருடையது என்பது தெரியவில்லை. சேவல் தொடர்பாக யாரிடமும் இருந்தும் எந்த புகாரும் வரவில்லை. இந்த சேவலை அப்படியே வெளியில் விட்டால் நாய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது என்று நினைத்த பொலிஸ் அதிகாரி ரமேஷ்பாபு சேவலை சிறையிலேயே அடைத்து வைத்து அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தார்.
இதுகுறித்து குறித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது பாதுகாப்பு கருதி பொலிஸ் பாதுகாப்பில் சேவல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்