இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளின் பராமரிப்புக்காக இரண்டு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல், பழுதடைந்த கிராம வீதிகளை பராமரிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க 55 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதீட்டு உரையில் தெரிவித்துள்ளார்.