கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட செயற்கை கடற்கரையை பார்வையிடடுவதற்காக நேற்று முன்தினம் சனி கிழமை முதல் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மூவாயிரம் பேர் வருகை தந்துள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த செயற்கை கடற்கரையை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரை விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சுற்றுலாவில் ஈடுபடும் வகையில் சேவைகளின் வலையமைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக நகர அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.