செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில்நேற்று வரை 115 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 102 மனித எச்சத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 29ஆம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது பாரிய மனித எலும்புக்கூட்டுடன் குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டு, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
இதேநேரம் நேற்று புதிதாக 4 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு, 3 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்தார்.