சுவாமி தரிசனத்தின் போது கண் முன்னே மோட்டார் சைக்கிள் திருட்டு
-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அராலி வடக்கினை சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிளை இயக்க நிலையில் வைத்துவிட்டு கல்லுண்டாய் வைரவர் கோவிலை தரிசித்து கொண்டிருந்தார்.
இதன்போது அப்பகுதியில் நின்ற ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஸ்கவர் (Discover) NP – WN 3141 என்ற இலக்க மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.