கொழும்பு வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவிகள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.