வெல்லவாய கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று புதன் கிழமை காலை வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது குறித்த வேனில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் வேன் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது எனினும் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.