குஜராத்தில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஹரணியில் உள்ள மோட் நாத் ஏரியில் தனியார் பாடசாலையை சேர்ந்த 23 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் படகு சவாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக படகு மூழ்கி 2 ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 5 மாணவர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
மேலும் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் நிவாரணமாக வழங்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.