எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செக் குடியரசின் பிரஜை ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல நீர் கம்பம் வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்த சுற்றுலா பயணி இரவு படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததையடுத்து 1990 அம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல விடுதி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.