இந்த வருடம் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.