-கிண்ணியா நிருபர்-
சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தை நனவாக்கும் நோக்கில், இன்று வியாழக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அரச துறை மூலம் தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வழங்குவது என்றும், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.