-யாழ் நிருபர்-
சுன்னாகம் – தாளையடி பூரணை புஷ்கலை சமேத ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் படைசூழ மங்கள வாத்தியங்கள் முழங்க யானைகள், குதிரைகள் பவனியாக கும்பங்கள் வலம் வந்து மகாகும்பாபிஷேக கைங்கரியம் நிகழப்பெற்றது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்