50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அதன் உற்பத்தி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இவ்விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்று 3,100 ரூபாவாக விலை குறைத்துள்ளது.
இதேவேளை, 50 கிலோகிராம் டோக்கியோ சுப்பர் மற்றும் நிப்பொன் சீமெந்து மூடையின் விலையும் இன்று நள்ளிரவு முதல் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி, குறித்த சீமெந்துகளின் புதிய விலை 3,100 ரூபா குறைவடையவுள்ளன.