சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் கைத்தொழில் துறை மற்றும் அனைத்து வர்த்தகத் துறைகளும் அதிக செலவீனங்களைச் சுமக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டிருப்பதால் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.