சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3,239 கிலோகிராம் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை அழிக்க நேற்று புதன் கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கால்நடை அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் கலாநிதி சஞ்சிக பெரேரா தெரிவித்துள்ளார்.
வெலிசறை குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த பொருட்களில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, 2,560 கிலோகிராம் உறைந்த புதிய வாத்து இறைச்சி, 171 கிலோகிராம் கோழி, 56 கிலோகிராம் தைவான் கிரில் இறைச்சி, 132 கிலோகிராம் வாத்து தலைகள், 12 கிலோகிராம் பன்றி இறைச்சி, 20 கிலோகிராம் மற்றும் 20 கிலோகிராம் கோழி இறக்கைகள் இந்த சரக்குகளில் அடங்குவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.