மஹியங்கனை எசல பெரஹெராவில் கலந்துகொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சீதா என்ற யானையை காட்டு யானை என நினைத்து மாபகடவெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை மஹியங்கனை பதில் நீதவான் எஸ். கோவிந்த முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயத்திற்கு உள்ளான சீதா என்ற யானைக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.