தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர்,
பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மெக்லாரன் குழுமத்தின் உரிமையாளரின் மகளை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர திருமணம் செய்யப் போவதாகவும், அதன் காரணமாகவே சீன நிறுவனமான ‘சினோபெக்’ நிறுவனத்தின் முகவராக ‘மெக்லாரன்ஸ்’ குழுமம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக ஊடகங்கள் மற்றும் பல இணையத்தளங்கள் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வதாகவும், பரப்புவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.