நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 425 கிராம் டின் மீனின் 475 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கு 280 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி 175 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 309 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசி 206 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளை பச்சையரிசி 199 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.