குருநாகலில் உள்ள சில்லறை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதன் காரணமாக குருநாகல் நீர்கொழும்பு மலியதேவ கல்லூரிக்கு அருகில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கபெறாத நிலையில் குறித்த வீதியினை பயன்படுத்துவோர் மாற்று வழியினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.