-கிளிநொச்சி நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது சடலம் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.
இதன்போது, இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த நபர் விடுதலைப்புலிகளின் சிறை கைதிகளுக்கான பொறுப்பாளராக கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கொலை குற்றவாளி சட்டதரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
குறித்த நபர் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் 14 நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி