புத்தளம் நீதிமன்ற மூன்றாவது சிறைச்சாலைக் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கப்புஹேன கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்த திஸாநாயக்க (வயது – 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைதுசெய்யப்பட்டு, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.சி.ஹதுருசிங்ஹ சடலத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.