நாடளாவிய ரீதியில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலைகளிலும் தண்டனைகளை அனுபவித்து வரும் இந்து மத சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தைப்பொங்கல் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு உணவுப்பொதிகள், இனிப்புகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.