கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்தின் உரிமையாளரினால் நேற்று ஞாயிற்று கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அதன்படிஇ கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய காணாமல் போன குறித்த சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.