வவுனியா, குடியிருப்பு பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.