பொலனறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞன் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய 7000 படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பொலனறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.